இவர்களுடன்தான் எனது கூட்டணி: ரகசியத்தைப் போட்டுடைத்த முதல்வர் 
இந்தியா

இவர்களுடன்தான் எனது கூட்டணி: ரகசியத்தைப் போட்டுடைத்த முதல்வர்

யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய ரகசியத்தை தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இன்று வெட்டவெளிச்சமாக அறிவித்துவிட்டார்.

DIN

நாக்பூர்: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய ரகசியத்தை தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இன்று வெட்டவெளிச்சமாக அறிவித்துவிட்டார்.

ஆம்.. நாட்டில் உள்ள 130 கோடி இந்திய மக்களுடன் மட்டும்தான் எனது கூட்டணி என்று அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜரிவால், பல கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு அதுபோன்ற கூட்டணிகளில் எந்த விருப்பமும் இல்லை. அரசியல் செய்வது எப்படி என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதில்லாமல் 10க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட யாரையாவது தோற்கடிக்க வேண்டும். எனக்கு யாரையும் தோற்கடிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு நாடு வெற்றி பெறவேண்டும். அவ்வளவுதான் என்று குறிப்பிட்டார்.

இலவச அறிவிப்புகளும் சில மாநிலங்களில் கட்சிகள் தரப்பில் கொடுக்கப்படுகிறது. ஆனால் அது பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என்றும் என்றும் கேஜரிவால் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT