இந்தியா

தில்லி ஷஹீன் பாக் பகுதியில் கட்டடங்களை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

DIN

போராட்டம் வலுத்ததால் தில்லி ஷஹீன் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தில்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாத சட்டவிரோத கட்டங்களை இடிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணி இன்று காலை தொடங்கியது. 

இதையடுத்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டதால் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. 

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்க முற்பட்ட நிலையில், போதிய போலீசார் பாதுகாப்பு இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. 

அண்மையில் தில்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அங்குள்ள சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்றது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில், தில்லி ஷஹீன் பாக் பகுதியில் 100 நாள்கள் போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT