இந்தியா

ஆந்திரத்தில் அதிர்ச்சி: 12-ம் வகுப்பு மாணவர் திடீரென சுருண்டு விழுந்து பலி

ஆந்திரத்தில் 12-ம் வகுப்பு மாணவர் திடீரென சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ஆந்திரத்தில் 12-ம் வகுப்பு மாணவர் திடீரென சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி, கம்மவாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (17) கூடூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். நடைபெற்று வரும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக தினமும் கிராமத்திலிருந்து ஊருக்குச் சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை தேர்வு தொடங்குவதற்கு முன், மற்ற மாணவர்களுடன் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்த சதீஷ் திடீரென மயங்கி சுருண்டு தரையில் விழுந்துள்ளார். 

மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் மாணவர் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். 

நேரில் பார்த்தவர்களின் கூறியதாவது, 

மாணவனுக்கு திடீரென்று வியர்க்க ஆரம்பித்து, சற்று நேரத்திலேயே தரையில் மயங்கி விழுந்தார். அவரை கூடுருவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, தகவல் கிடைத்ததும் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். 

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT