இந்தியா

தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் எங்களுடையது: பாஜக எம்.பி.

தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தது என பாஜக எம்.பி.யும் ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியா குமாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN


தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தது என பாஜக எம்.பி.யும் ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியா குமாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலில் ஹிந்து சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய, அங்குள்ள 20 அறைகளைத் திறக்க இந்திய தொல்லியல் துறையை அறிவுறுத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னௌ அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தது என பாஜக எம்.பி. தியா குமாரி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் தியா குமாரி கூறியதாவது:

"ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்திடமிருந்து ஷாஜகான் நிலத்தைக் கையகப்படுத்தியபோது, அவர்களால் அதை எதிர்க்க முடியவில்லை. காரணம், அப்போது அது ஷாஜகான் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஜெய்ப்பூர் ராஜ குடும்ப அறக்கட்டளையிடம் நிலத்துக்கான ஆவணங்கள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க ராஜ குடும்பம் தயார்.

இன்றைக்கும் அரசு நிலத்தைக் கையகப்படுத்தினால், அதற்குப் பதிலாக இழப்பீடு கொடுக்க வேண்டும். அப்போதும் சில இழப்பீடுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், ஷாஜகானுக்கு எதிராகவோ அல்லது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ எந்தவொரு சட்டமும் அப்போது கிடையாது.

தாஜ்மஹாலிலுள்ள கதவுகளைத் திறக்க யாரோ வலியுறுத்தியிருப்பது நல்ல விஷயம். அதன்மூலம் உண்மை வெளிவரட்டும். இந்த விவகாரம் குறித்து நாங்களும் தற்போது ஆராய்ந்து வருகிறோம்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்

இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

டிப்பா் லாரி மோதி 20 ஆடுகள் உயிரிழப்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் 50 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்

ஆட்சியரகத்தில் பழைய வாகனம் டிச. 10-இல் பொது ஏலம்

SCROLL FOR NEXT