இந்தியா

ராஜஸ்தான் வன்முறை: பாரத்பூரில் 144 தடை உத்தரவு 

DIN

பாரத்பூர் மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலையடுத்து, ராஜஸ்தான் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இரு சமூகத்தினரிடையே வன்முறை மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாராத்பூரில் பதற்றம் நிலவியது. வன்முறை சம்பவத்தை அடுத்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பை நடத்தி வருகின்றது. முன்னதாக தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் மேற்கூரைகளில் இருந்து ஏராளமான காலி பாட்டில்கள் மற்றும் கற்கள் மீட்கப்பட்டன.

பாட்டில்கள் மற்றும் கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தேடுதல் நடவடிக்கைக்காக தோல்பூரில் இருந்து கூடுதல் படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, மேலும் அசம்பாவிதங்கள்  நடைபெறாத வகையில் தடுக்க பாராத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT