முகப்பு
இந்தியா

பிரதமர் மோடிக்கு குஜராத் பெண்கள் கொடுத்த பரிசு என்னவென்று தெரியுமா?

குஜராத்தின் பரூச் நகரில் பெண்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ராக்கியை அன்பு பரிசாக கொடுத்தனர்.

Updated On : 12 மே, 2022 at 4:19 PM
பகிர்:

புது தில்லி: குஜராத்தின் பரூச் நகரில் பெண்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ராக்கியை அன்பு பரிசாக கொடுத்தனர்.

குஜராத்தின் பரூச் நகரில் பெண்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு உடல் நலம் பெருக வாழ்த்து தெரிவித்தனர். மிகப்பெரிய ராக்கியை பரிசாக அணிவித்து, நாட்டில் பெண்களின் கண்ணியம் மற்றும் எளிமைக்காக அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

ராக்கி வடிவில் தனக்கு வலிமை தந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, கடினமுடன் உழைக்க வேண்டும் என்று தனக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு கேடயம் போல் இது விளங்கும் என்று கூறியுள்ளார்.

"உங்கள் ராக்கி எனக்கு பலத்தையும், கனவை நிறைவேற்றும் ஆற்றலையும் அளித்துள்ளது. இந்த ராக்கியை விலைமதிப்பற்ற பரிசாக நான் கருதுகிறேன். ஏழைகளுக்கு சேவை செய்யவும், அரசுக்கு 100 சதவீதம் செறிவூட்டும் வகையில் செயல்படவும் இது என்னை ஊக்குவிக்கும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.