கோப்புப் படம் 
இந்தியா

ஆந்திரம்: தலித் சிறுமி கூட்டு பாலியலால் கர்ப்பம்

DIN

அமராவதி: ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இளைஞர்களால் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான தலித் சிறுமி கற்பமாக்கப்பட்டுள்ளார். 

சிறுமி கடப்பா மாவட்டம் ப்ரோடத்தூர் பகுதியில் தனது தாய் இறந்த பிறகு பிச்சை எடுத்து வந்துள்ளார். இளைஞர்கள் சிலர் தங்கள் நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்து வந்திருக்கின்றனர் சில மாதங்களாக. அந்த சிறுமி கர்ப்பமனா பிறகு தான் இந்த விஷயமே வெளியில் தெரியவந்தது.

 உள்ளூர்க்காரர்கள் தகவல் தெரிவித்த பிறகு, பெண் காவலர் ஒருவர் அந்த சிறுமியிடம் நடந்ததை விசாரித்து எழுத்து பூர்மாவாக வழக்கு பதிந்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஆசிரமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

போலீசார்கள் வழக்கு பதியாமல் குற்றவாளிகளை தப்பிக்க விடுவதாக புகார்கள் எழுந்த நிலையில் கடப்பா டிஎஸ்பி அன்பு ராஜன் மறுத்துள்ளார். 

எதிர் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தேசியப் பொது செயலாளர் லோகேஷ் "காவலர்கள் உடனே வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் பெண்ணை ஆசிரமத்துக்கு அனுப்புவது மனிதத் தன்மையற்ற செயல். குண்டுகளை விட விரைவாக வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவேன் என்று விளம்பரப்டுத்தியவர் ஜெகன் மோகன் ரெட்டி. இப்போது அவரும் வரவில்லை குண்டும் வரவில்லை" என்று கூறியுள்ளார். 

கடப்பா ஜெகன் மோகன் அவர்களின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT