முகப்பு
இந்தியா

உதய்பூருக்கு ரயிலில் பயணித்த ராகுல் காந்தி

​காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியிலிருந்து உதய்பூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியிலிருந்து உதய்பூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்று மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக உதய்பூர் செல்ல ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார் அவர். 

இதற்காக, ராகுல் காந்தி தில்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தை வியாழக்கிழமை மாலை வந்தடைந்தார்.

அவரை வழியனுப்பிவைக்க காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் நிலையத்தை சூழ்ந்தனர்.

அப்போது, ரயில் நிலையத்திலிருந்த தொழிலாளிகள் ராகுல் காந்தியுடன் உரையாடினர்.

உதய்பூர் கூட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு விரைகின்றனர். கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →