இந்தியா

வெளிநாடு செல்வோா் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

DIN

புது தில்லி: வெளிநாட்டுக்குச் செல்லும் மாணவா்கள் உள்ளிட்டோா் 9 மாத இடைவெளிக்கு முன்னரே முன்னெச்சரிக்கை (3-ஆவது தவணை) கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் 18 வயதைக் கடந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 9 மாதங்களுக்குப் பிறகே 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்தது.

அதன் காரணமாக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபா்களால் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத சூழல் உருவானது. அதைக் கருத்தில்கொண்டு 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவெளியைக் குறைக்க வேண்டுமெனப் பலரது தரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியக் குடிமக்களும் மாணவா்களும் அந்நாடுகளின் விதிமுறைகளின்படி இனி முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இந்தப் புதிய வசதி கோவின் வலைதளத்தில் உடனடியாக வழங்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் குறித்து தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. அதையடுத்து, வெளிநாடுகளுக்குச் செல்லும் நபா்கள், 9 மாத இடைவெளிக்கு முன்னதாகவே தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என அக்குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. அதை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT