முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் வேன்-டிரக் மோதல்: 12 பேர் பலி, 8 பேர் காயம்

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் 2 பயணிகள் வேன்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் 2 பயணிகள் வேன்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து தலைமைக் காவலர் உஸ்மான் திப்பு கூறுகையில், 

குஜ்ரன்வாலாவின் கோட் லதா பகுதிக்கு அருகில் ஹபிசாபாத் சாலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வேனிலிருந்த பயணிகள் சர்கோதாவில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றுவிட்டு குஜ்ரன்வாலாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி பயணிகள் வேன்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹபிசாபாத் மற்றும் குஜ்ரன்வாலா மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

விபத்து நடந்தவுடன் டிரக் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →