ஹரியாணாவில் ரூ.11,000 கோடியில் மாருதி சுசூகியின் புதிய தொழிற்சாலை 
இந்தியா

ஹரியாணாவில் ரூ.11,000 கோடியில் மாருதி சுசூகியின் புதிய தொழிற்சாலை

ஹரியாணாவில், மாருதி சுசூகியின் ரூ.11,000 கோடியில் அமையவிருக்கும் புதிய தொழிற்சாலைக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: ஹரியாணாவில், மாருதி சுசூகியின் ரூ.11,000 கோடியில் அமையவிருக்கும் புதிய தொழிற்சாலைக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, ஹரியாணா மாநிலத்தில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்க ரூ.11,000 கோடியை முதலீடு செய்கிறது.

இதற்காக, சோனிபட் மாவட்டத்தில் 800 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கான மாநில தொழிற்துறை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துடனான திட்டப் பணிகள் இன்று நிறைவு பெற்றுள்ளது.

பல்வேறு நிர்வாக ஒப்புதல்களுக்குப் பிறகு 2025ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார் தொழிற்சாலை, ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT