இந்தியா

நீட் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்தி

DIN

புது தில்லி: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சுட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் முதுநிலை நீட் தேர்வு  கலந்தாய்வு தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்று கூறியுள்ளார்.

முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று, இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை.

பல மாநில மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் இம்மாத பிற்பாதிக்குள்தான் நிரப்பப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT