இந்தியா

தென்மேற்குப் பருவமழை மே 27-இல் தொடங்கும்

DIN

இந்திய விவசாயத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழும் தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் மே 27-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்குகிறது. அந்தமான் நிகோபாரில் மே 15-ஆம் தேதி பருவமழை தொடங்க இருக்கிறது.

வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழை தொடங்குவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.

கேரளத்தைத் தொடா்ந்து கடலோர கா்நாடகம், மும்பை, கொங்கண் பிரதேச கடற்கரைப் பகுதிகள், தலைநகா் புது தில்லி, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாகக் தென்மேற்குப் பருவமழை பொழியும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்குப் பருவமழையால் பயனடைகின்றன. இந்தப் பருவமழை குறைந்தால் நாட்டில் விவசாயமும் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT