இந்தியா

தில்லி உயர்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞர்கள் 9 பேர் நீதிபதிகளாக நியமனம்

DIN

புது தில்லி: தில்லி உயர்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞர்கள் 9 பேரை புதிய நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 217-இன் உள்பிரிவு (1) தனக்களித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மூப்பு நிலை அடிப்படையில் தாரா விதஸ்தா கஞ்சு, மினி புஷ்கர்னா, விகாஸ் மஹாஜன், துஷார் ராவ் கேடேலா,மன்மித் பிரீதம் சிங் அரோரா, சச்சின் தத்தா, அமித் மஹாஜன், கௌரங் காந்த் மற்றும் சௌரவ் பானர்ஜி ஆகிய வழக்குரைஞர்கலை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.  

இதையடுத்து, இவர்கள் விரைவில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT