முகப்பு
இந்தியா

ஹைதராபாத்: தாயின் உடலுடன் மூன்று நாள்கள் தவித்தவர் மனநலம் பாதித்தவரா?

ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில், உயிரிழந்த தாயின் உடலுடன் மூன்று நாள்கள் 22 வயது மகன் தவித்து வந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Updated On : 14 மே, 2022 at 3:30 PM
ஹைதராபாத்: தாயின் உடலுடன் மூன்று நாள்கள் தவித்தவர் மனநலம் பாதித்தவரா?
பகிர்:


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில், உயிரிழந்த தாயின் உடலுடன் மூன்று நாள்கள் 22 வயது மகன் தவித்து வந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உயிரிழந்த 50 வயது விஜயாவின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மகன் விசாரணைக்காக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

ஆனால், அந்த மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது தகராறு ஏற்படும் என்றும் மகன்தான் தாயை கொலை செய்திருக்கக் கூடும் என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.