முகப்பு
இந்தியா

மே 26-ஆம் தேதியுடன் பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள்

பிரதமராக மோடி பதவியேற்று மே 26-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

பிரதமராக மோடி பதவியேற்று மே 26-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அவா் ஹிமாசல பிரதேசத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் சுரேஷ் காஷ்யப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஹிமாசல பிரதேசத்தை தனது இரண்டாவது வீடாக பிரதமா் மோடி கருதுகிறாா். அவா் பிரதமராகப் பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையுள்ளதையொட்டி, மே 31-ஆம் தேதி ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பிரதமா் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது. மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரும் விரைவில் ஹிமாசல பிரதேசம் வரவுள்ளனா்’’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →