நாட்டில் புதிதாக 2,487 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,487 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,487 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,487 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,878 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு
இதுவரை மொத்தம் 4,25,79,693 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,24,214 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 17,692 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
மேலும் 15,58,119 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,91,32,94,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.