இந்தியா

திரிபுரா முதல்வராக மாணிக் சஹா பதவியேற்பு

DIN


திரிபுரா முதல்வராக பாஜக மாநிலத் தலைவர் மாணிக் சஹா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் எஸ்.என். ஆர்யா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திரிபுரா முன்னாள் முதல்வர் விப்லப் தேவ் சனிக்கிழமை மாலை திடீரென முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் சஹா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநில முதல்வராக மாணிக் சஹா பதவியேற்றுக்கொண்டார்.

முன்னாள் முதல்வர் விப்லப் தேவ், பாஜக எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக்கும் இதில் பங்கேற்றார். 

சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தின் முதல்வராக சஹா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாற்காலிகளை உடைத்த துணை முதல்வர் ஜிஷ்னு தேவ் வர்மா மற்றும் அமைச்சர் ராம் பிரசாத் பால் ஆகியோர் பதவியேற்பு விழா நிறைவடைந்தவுடன் ஆளுநர் மாளிக்கைக்கு வந்தனர்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பேசிய மாணிக் சஹா, "திரிபுரா மக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வேன். மாநிலத்தின் சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்துவேன்" என்றார்.

எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்கள் இந்த விழாவைப் புறக்கணித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT