முகப்பு
இந்தியா

திரிபுராவின் முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சஹாவுக்கு பிரதமர் வாழ்த்து

திரிபுராவின் முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சஹாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:16 AM
பகிர்:

திரிபுராவின் முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சஹாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "திரிபுராவின் முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சஹாக்கு வாழ்த்துக்கள். பயனுள்ள பதவிக் காலம் அமைய அவருக்கு வாழ்த்துக்கள். 2018- இல் தொடங்கிய திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் வேகம் சேர்ப்பார் என்று நான் நம்புகிறேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரிபுரா முன்னாள் முதல்வர் விப்லப் தேவ் சனிக்கிழமை மாலை திடீரென முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் சஹா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மாநில முதல்வராக மாணிக் சஹா பதவியேற்றுக்கொண்டார்.

முன்னாள் முதல்வர் விப்லப் தேவ், பாஜக எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக்கும் இதில் பங்கேற்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →