முகப்பு
இந்தியா

அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தம் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்...

Updated On : 7 மார்ச், 2026 at 9:02 PM
பியூஷ் கோயல்
பகிர்:

தனக்குப் போட்டியாக உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவாா்த்தை மாநாட்டில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

உலகின் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டை தவிா்த்துவிட்டு செயல்பட வேறு எந்தவொரு நாடும் விரும்பாது.

அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. இந்தியா மற்றும் பிரதமா் மோடி குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் எப்போதும் நல்ல விஷயங்களை தெரிவித்து வருகிறாா்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், ஓரிரு நேரங்களில் அவா்களுக்கு இடையே தவறான புரிதல் ஏற்படுவதுண்டு. அதுபோல

சில நேரங்களில் இந்தியா-அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அது இயல்பானதே.

எனினும் தனக்குப் போட்டியாக உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →