இந்தியா

புத்த பூர்ணிமா: நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர்வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

புத்த பூர்ணிமாவையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர்வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு - “மங்களகரமான புத்த பூர்ணிமாவையொட்டி, நமது நாட்டு மக்களுக்கும், அதற்கு அப்பால் உள்ள மக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் தலைசிறந்த ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான புத்தர் மிக ஆழமான உண்மைகளைப் போதித்தார். அவருடைய போதனைகள் நமது துக்கங்களுக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, உணர்வுள்ள உயிரினங்களை துன்பத்திலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

சந்தேகத்திற்கு இடமின்றி, பகவான் புத்தரும் அவரது தர்மமும் ஒளியின் நித்திய ஆதாரமாகும். அது, ஒழுக்கம், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ஞானஒளி பெற்ற புத்த பகவான் காட்டிய உலகளாவிய அன்பு, இரக்கம் மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT