கோப்புப்படம் 
இந்தியா

அருணாசலில் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

அருணாசலில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

DIN

அருணாசலில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது

இந்த நிலச்சரிவு குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, ” பஞ்சாபி தாபா அருகில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்ட மூங்கில் வீட்டில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார். அவரது நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன” என கூறியுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் நாகேன் பார்மன் ( 50 வயது ), தபாஸ் ராய் ( 15 வயது) ஆவர். 35 வயது நிரம்பிய குஷம் ராயினை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், நிலச்சரிவிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உரிய உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT