இந்தியா

இமாச்சலில் அடுத்த 3 நாள்களுக்கு ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் லேசான ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் லேசான ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, 

மாநிலத்தின் உயரமான பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று  சிம்லா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தின் வெப்பமான இடமாக உனா இருந்தது, அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ், அதைத் தொடர்ந்து காங்க்ராவில் 41 டிகிரி, ஹமிர்பூரில் 40 டிகிரி, பிலாஸ்பூரில் 39.2, சாம்பாவில் 39, சுந்தர் நகரில் 37.7, நாஹன் மற்றும் பன்டரில் 37.5, சோலன் 37.2, சர்மஸ்தலா 37, பலம்பூக்ர மற்றும் சிம்லாவில் 30,5 ஆகவும் வெப்பநிலை பதிவானது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT