இந்தியா

ராஜஸ்தானில் சாலை விபத்து: பெண் நீதிபதி பலி, மூவர் படுகாயம்

ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காரும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் நீதிபதி ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். 

DIN

ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காரும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் நீதிபதி ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். 

பிகானேர்-கஜுவாலா நெடுஞ்சாலையில் ஜல்வாலி கிராமம் அருகே கூடுதல் மாவட்ட நீதிபதி சதோஜ் சௌத்ரியின் தனியார் கார், நீர்ப்பாசனத் துறை உதவிப் பொறியாளர் சங்கர் லாலின் ஜீப் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் படுகாயமடைந்த நிலையில், அனுப்காரில் பணிபுரியும் நீதிபதி சௌத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று ஜாம்சார் காவல் அதிகாரி பவன் குமார் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் பிகானரில் உள்ள பிபிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், நீதிபதியின் உடல் மருத்துவமனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பின்னர் அது அகற்றப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT