கார்த்தி சிதம்பரம் 
இந்தியா

‘ஆறாவது முறையாக சோதனை’: கார்த்தி சிதம்பரம்

ஆறாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

DIN

ஆறாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை கார்த்தி சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எனது அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது. 2015இல் இரண்டு முறை, 2017இல் ஒருமுறை, 2018இல் இரண்டு முறை, இன்று ஆறாவது முறையாக சோதனை நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT