முகப்பு
இந்தியா

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
கோப்புப்படம்
பகிர்:


நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 

18.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

19.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

20.05.22 முதல் 22.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

விரிஞ்சிபுரம் 15, சங்கரிதுர்க் 13, ஜமுனாமரத்தூர் 10, ஓசூர் 9, எடப்பாடி 7, ஓகேனக்கல் 6, திருப்பத்தூர், ஏற்காடு, ஓமலூர், தம்மம்பட்டி, தேவாலா தலா 5, மேட்டூர், ஆலங்காயம், சோழவரம், சேலம் 4, பாப்பிரெட்டிப்பட்டி, கொடுமுடி, பெண்ணாகரம், பூந்தமல்லி, குழித்துறை, தேன்கனிக்கோட்டை, தளி, கரியகோவில் அணை, களியல், பேச்சிப்பாறை, வால்பாறை, பொள்ளாச்சி, சூரளக்கோடு, காட்பாடி, சத்தியமங்கலம், காங்கேயம், செங்கம், தக்கலை தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது. பல்லடம், வடபுதுப்பட்டு, மேட்டுப்பாளையம், ஆவடி, கன்னிமார் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

18.05.22 முதல் 19.05.22: தென் கிழக்கு அரபிக் கடல், லட்சதீவு, மாலத்தீவு, கர்நாடகா-கேரளா கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40  முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →