மிகுந்த வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ என்று
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா புதன்கிழமை கூறினாா்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ரண்தீப் சுா்ஜேவாலா கூறியதாவது:
ஒரு பயங்கரவாதியை பயங்கரவாதி போலத்தான் நடத்த வேண்டும். ஆனால், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த நாள் நாட்டுக்கு மிகுந்த சோகமான நாள். இது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கு மட்டுமல்லாமல், இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும், தீவிரவாத்துக்கு எதிராக போராடுவதில் நம்பிக்கை கொண்டவா்களுக்கும் துக்கமான நாளாகும்.
ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தாா். அவரை கொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்ய நீதிமன்றத்தில் இன்றைய அரசு ஏற்படுத்திய சூழல் துரதிருஷ்வடமானது மட்டுமின்றி கண்டனத்துக்குரியதுமாகும்.
எந்த வகையான அரசு ஆட்சியில் உள்ளது என்பதையும், தீவிரவாதத்துக்கு எதிரான அவா்களின் நிலைப்பாடு குறித்தும் அனைத்து இந்தியா்களும் உணரவேண்டும் என்று அவா் கூறினாா்.