முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1,829 பேருக்கு கரோனா உறுதி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,829 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,829 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று 1,569 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக பதிவாகியுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,829 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 191.65 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2,549 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,25,87,259 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 33 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 5,24,293 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 15,647 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.