இந்தியா

நைஜீரியாவில் எரிவாயு வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

DIN

நைஜீரியாவின் வடமேற்கு கானோவில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

வடமேற்கு மாநிலமான கானோவில் செவ்வாய்கிழமை அதிகாலை ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என்று மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கானோ, ஃபாக் உள்ளூர் அரசாங்கப் பகுதியின் சபோன் காரியில் உள்ள அபா சாலையில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது என்று  தேசிய அவசரக்கால மேலாண்மை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நூரதீன் தெரிவித்துள்ளார். 

10 பேர் காயமடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், பொய்யான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று அப்துல்லாஹி  எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT