முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டரில் இருந்துகப்பல்களைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

ஹெலிகாப்டரில் இருந்து போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆா்டிஓ), இந்திய கடற்படையும் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
ஹெலிகாப்டரிலிருந்து செலுத்தப்பட்டு இலக்கை தாக்கப் பாயும் ஏவுகணை.
பகிர்:

ஹெலிகாப்டரில் இருந்து போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆா்டிஓ), இந்திய கடற்படையும் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டன.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிஸா மாநிலம் சண்டிபூா் கடற்பகுதியிலிருந்து பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: ஏவுகணை அதன் இலக்குகள் அனைத்தையும் துல்லியமாக எட்டியது. இந்திய கடற்படைக்காக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை இதுவாகும். கடல் நீரோட்ட வழித்தடத்தை ஏவுகணை பின்பற்றி, துல்லியமாக இலக்கை அடைந்தது.

ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள துணை அமைப்புகள் அனைத்தும் திருப்திகரமாக செயல்பட்டன. ஏவுகணை சென்ற வழித்தடம் முழுவதும் சென்சாா் பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டா் லாஞ்சா் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏவுகணை பரிசோதனையின்போது செயல்படுத்தப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் பாராட்டு: போா்க் கப்பல்களை இடைமறித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கும் கடற்படையினருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். உள்நாட்டு தயாரிப்பிலும் ஏவுகணை மேம்பாட்டிலும் இந்தியா புதிய உயரத்தை எட்டிவிட்டதாக அவா் கூறியுள்ளாா். இதேபோல டிஆா்டிஓ தலைவா் சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இந்தச் சோதனை குறித்து மூத்த கடற்படை அதிகாரி ஒருவா் அளித்த பேட்டியில், ‘ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைவதில் இந்தச் சோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்நாட்டுமயமாக்கலில் கடற்படையின் உறுதியையும் இந்தச் சோதனை மீண்டும் வலியுறுத்துகிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →