குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 12 தொழிலாளர்கள் பலி
குஜராத்தின் மார்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ள சாகர் உப்பு தொழிற்சாலையில் சாக்குகளில் உப்பு நிரப்பும் பணி நடந்துகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.