முன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இன்று முன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாமுன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இன்று முன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புது தில்லி: இன்று முன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகெளடா மே 18, 1933-ல் ஹரடனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஹொலேனரசிபுரா தாலுகாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு வயது 89. இவா் 11-வது இந்திய பிரதமராக கடந்த 1996-97 ஆகிய ஆண்டுகளில் சுமார் 11 மாதங்கள் பதவி வகித்துள்ளார் மற்றும் 1994 முதல் 1996 வரை 14-வது கர்நாடக முதல்வராகவும் இருந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகெளடா பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி சுட்டுரையில், "முன்னாள் பிரதமரும் மரியாதைக்குரிய தேவகவுடா ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தரட்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தில்லி: ரோகிணி நீதிமன்றத்தில் தீ விபத்து