உ.பி.யில் பயங்கரம்: புதிதாக திருமணமான தம்பதி கழுத்தறுத்துக் கொலை
உத்தர பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாஉ.பி.யில் பயங்கரம்: புதிதாக திருமணமான தம்பதி கழுத்தறுத்துக் கொலை
உத்தர பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதியினரின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து இறந்த தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துணை காவல் ஆணையர் பிரஜேஷ் ஸ்ரீநிவஸ்தவா கூறியதாவது, “ ஷிவம் திவாரி (27 வயது) மற்றும் அவரது மனைவி ஜூலி திவாரி (24 வயது) இருவரும் அவர்களது அறையில் உறங்கியுள்ளனர். ஷிவம் திவாரியின் தந்தை தீபக் குமார் மற்றும் அவரது சகோதரர் மேற்புற அறையில் உறங்கியுள்ளனர். அவர்களது வீட்டில் சிலர் வாடகைக்கும் தங்கியுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஷிவம் திவாரியின் அறைக் கதவு திறந்திருப்பத்தைப் பார்த்த வாடகைக்கு வசிப்பர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு ஷிவம் திவாரி மற்றும் அவரது மனைவி ஜூலி திவாரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்” என்றார்.
கொலை செய்யப்பட்ட தம்பதியின் கழுத்தில் உள்ள வெட்டுக் காயத்தினை பார்க்கும்போது கொலையாளி கூரிய ஆயுதத்தைக் கொண்டு அவர்களை கொலை செய்துள்ளான் எனத் தெரிவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.