கார்த்தி சிதம்பரம் 
இந்தியா

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்

காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை விசாரிக்க 4 நாள் காவலில் எடுத்துள்ளது சிபிஐ.

DIN

காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை விசாரிக்க 4 நாள் காவலில் எடுத்துள்ளது சிபிஐ.

பஞ்சாப் மாநிலம், மான்ஸா பகுதியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வந்த மின் திட்டப் பணிகளில் வேலை செய்ய 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வழங்க ரூ. 50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ காவல்துறையினர் நேற்று முன்தினம்(மே-17) வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை வீடு உள்பட மும்பை, ஒடிசா, கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 இடங்களில் நேற்று முன் தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், பாஸ்கரராமனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT