நவ்ஜோத் சிங் சித்து 
இந்தியா

சரணடைய கால அவகாசம் கோரி நவ்ஜோத் சிங் சித்து மனு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்  நவ்ஜோத் சிங் சித்து,  சரணடைய ஓரிரு வாரங்கள் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

DIN

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்  நவ்ஜோத் சிங் சித்து,  சரணடைய ஓரிரு வாரங்கள் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

34 ஆண்டுகளுக்கு முன்பு காருக்கு வழிவிடுவது தொடா்பான பிரச்னையில் முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. 

இதையடுத்து, நவ்ஜோத் சிங் சித்துவின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சித்து சரணடைய ஓரிரு வாரங்கள் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

சில மருத்துவ நிலைமைகளை காரணம் காட்டி தனது கட்சிக்காரருக்கு ஒரு வாரம் அவகாசம் கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விடம் மனு அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT