இந்தியா

ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு

DIN

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில், 

ஜூன் 5ல் திட்டமிடப்பட்டிருந்த தனது உத்தரப் பிரதேச சுற்றுப்பயணத்தை தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மே 22ம் தேதி காலை புணேயில் நடைபெறும் தனது பேரணியின் போது அதைப் பற்றி பேசுவதாகவும் அவர் கூறினார். 

அவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

மேலும், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் இல்லையெனில், மசூதிகளுக்கு வெளியே ஹனுமன் சாலீசா பக்திப் பாடலை அதிக சப்தத்துடன் ஒலிக்கவிடப்படும் என்று எம்என்எஸ் தலைவர் ராஜ்தாக்கரே சமீபத்தில் ஒரு சர்ச்சையை கிளப்பினார். 

இதையடுத்து, சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், தாக்கரேவின் அயோத்தி பயணத்தை எதிர்த்ததோடு, வட இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை உத்தரப் பிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்று எச்சரித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT