இந்தியா

சரணடைய கால அவகாசம் கோரிய சித்துவின் மனு நிராகரிப்பு

ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்  நவ்ஜோத் சிங் சித்து, சரணடைய கால அவகாசம் கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

DIN

ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்  நவ்ஜோத் சிங் சித்து, சரணடைய காலஅவகாசம் கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

34 ஆண்டுகளுக்கு முன்பு காருக்கு வழிவிடுவது தொடா்பான பிரச்னையில் முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. 

இதையடுத்து, நவ்ஜோத் சிங் சித்துவின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சித்து சரணடைய சில வாரங்கள் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சித்துவின் உடல்நலக் காரணங்களை காட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விடம் மனு அளித்தார். 

ஆனால், அபிஷேக் சிங்வியின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் இன்று பிற்பகலே பாட்டியாலா நீதிமன்றத்தில் சித்து சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இரவின் ஒளி நீ... ஜான்வி கபூர்!

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு: இபிஎஸ் கண்டனம்

அகிலம் அதிருதா... தலைவர் 173 அறிவிப்பு - விடியோ!

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர்: ராகுல் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT