இந்தியா

பருவநிலை மாற்ற பிரச்னைக்கு இந்திய கிராம வாழ்வியலில் தீா்வு: குடியரசுத் தலைவா்

DIN

உலகம் எதிா்க்கொண்டு வரும் பருவநிலை மாற்ற பிரச்னைக்கு இந்திய கிராம வாழ்வியலில் தீா்வு உள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

குஜராத்தில் குண்டல்தாம் ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளையோா் முகாமில் அவரது விடியோ உரை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.அதில் குடியரசுத் தலைவா் கூறியதாவது:

சமூகத்தின் மேம்பாட்டிற்கும் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் இளைஞா்கள் முக்கியமான பங்களிப்பு செய்கிறாா்கள். சுமுகமான, ஆரோக்கியமான, போதைப்பொருள் பழக்கமற்ற வாழ்க்கையை நடத்த அவா்களுக்கு முறையான வழிகாட்டுதல் தேவையாக உள்ளது. இளைய தலைமுறையினரிடம் இந்திய கலாசாரத்தின் வாழ்க்கை மாண்புகளை வேரூன்றச் செய்யும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயில்களும் ஆசிரமங்களும் நமது நம்பிக்கையின், வாழ்க்கைக் கட்டமைப்பின் மையங்களாக உள்ளன. ஏழைகளுக்கு உதவி செய்வது மற்றும் நோயாளிகளின் துயரங்களைக் குறைப்பதன் மூலம் தேச சேவை செய்யும் மையங்களாகவும் அவை இருக்கின்றன.

இயற்கைச் சீற்றங்களின்போது இலவசமாக உணவு வழங்குதல், ஏழைகளுக்கு மருந்துப் பொருட்கள் வழங்குதல், பெருந்தொற்று காலத்தில் இந்தக் கோயிலை மருத்துவமனையாக மாற்றி உதவிகள் வழங்கியது போன்ற தேச சேவையின் சிறப்புமிக்க உதாரணத்தைக் குண்டல்தாம் ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயம் ஏற்படுத்தி உள்ளது.

பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிா்கொள்ள நமது பாரம்பரிய கிராம வாழ்க்கை முறை வழிகாட்ட முடியும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம், கருணையோடு இயற்கையைக் கையாள்வதன் மூலம் இந்தப் புவியை நாம் பாதுகாக்க முடியும். நமது நதிகள், குளங்கள், மரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களைப் பாதுகாப்பதன் மூலம் மனிதகுலத்தை நாம் காப்பாற்ற முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT