கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 46 பேர் பலி

இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு மேலும் 46 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு மேலும் 46 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,022 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,38,393 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 14,832ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,23,869 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,099 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,25,99,102 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 8,81,668 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 192.38 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 2,94,812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 84.70 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

பிகாா் விவகாரம்: எதிா்க்கட்சிகள் தொடா் அமளி; மூன்றாவது வாரமாக முடங்கிய மக்களவை

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

SCROLL FOR NEXT