நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை 
இந்தியா

மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலா அழைத்து வரப்பட்டார் நவ்ஜோத் சிங் சித்து

மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று அழைத்து வரப்பட்டார். 

DIN

மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று அழைத்து வரப்பட்டார். 

கடந்த 1988-ஆம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கும் வகையில் பாட்டியாலா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதியின் ஆலோசகர் ஹெச்பிஎஸ் வர்மா கூறுகையில், 

சித்து சிறையில் சிறப்பு உணவை நாடியுள்ளார். எனவே, மருத்துவமனையில் சித்துவின் விரிவான மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் குழு மேற்கொள்ளும். 

மருத்துவர் குழு என்ன சிறப்பு உணவு தேவை என்பதைப் பார்க்கும், பின்னர் அது பாட்டியாலா உள்ளூர் நீதிமன்றத்தில் அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று வர்மா தொலைபேசியில் கூறினார். 

ஆலோசகரின் கூற்றுப்படி, சித்து கோதுமை, சர்க்கரை, மைதா மற்றும் வேறு சில உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. 

அவர் பெர்ரி, பப்பாளி, கொய்யா, பால் மற்றும் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் இல்லாத உணவுப் பொருட்களைச் சாப்பிடலாம் என்று வர்மா கூறினார்.

மருத்துவர்கள் குழு மருத்துவ பரிசோதனை செய்த பின், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என்றார்.

58 வயதான காங்கிரஸ் தலைவர் எம்போலிசம், கல்லீரல் போன்ற மருத்துவ பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சித்துவை ராஜேந்திரா மருத்துவமனைக்கு அழைத்து வந்ததையடுத்து, ஏராளமான காங்கிரஸ் ஆதரவாளர்கள் அங்குத் திரண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT