இந்தியா

சமாஜவாதி எம்எல்ஏக்கள் போராட்டம்: உ.பி. சட்டப்பேரவையில் பரபரப்பு

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தில் மாநில  அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமாஜவாதி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சமாஜவாதி கட்சி 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் கேசவ் பிரசாத் மெளரியா, பிரஜேஷ் பதக் ஆகிய இரு துணை முதல்வா்கள் உள்பட 52 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா். அதைத் தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். 

இந்நிலையில், அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்புக்குப் பிறகு 18 ஆவது உ.பி. சட்டப்பேரவை இன்று கூடியது. கூட்டத்தின் முதல் நாளான இன்றே சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேச அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சட்டப்பேரவையினுள்ளே அகிலேஷ் யாதவ் தலைமையில் எம்எல்ஏக்கள் அனைவரும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT