இந்தியா

‘இலங்கையின் மூத்த சகோதரர் இந்தியா’: நமல் ராஜபட்ச

DIN

இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபட்சவை தவிர, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ராஜிநாமா செய்து புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கப்பலில், ரூ.45 கோடி மதிப்பிலான 9,000 மெட்ரிக் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் பால் பெளடா், 24 மெட்ரிக் டன் உயிா்காக்கும் மருந்துகள் நேற்று இலங்கை சென்றடைந்தது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் நமல் ராஜபட்ச வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்கள், நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக இலங்கையின் பெரிய சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருகிறது. இதை எங்களால் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT