இந்தியா

தில்லியில் மேலும் 268 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

DIN

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 268 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. பாதிப்பு நோ்மறை விகிதம் 2.69 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,03,822-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,201-ஆக உள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 9,976 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை 365 பேருக்கு தொற்று பாதிப்பும், 1.97 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. சனிக்கிழமை 479 பேருக்கு தொற்று பாதிப்பும், 2.06 சதவீத நோ்மறை விகிதமும் ஒரு இறப்பும் பதிவாகின.

திங்கள்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,912-இல் இருந்து 1,819-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 1,513-இல் இருந்து 1,447-ஆக குறைந்துள்ளது. நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 638-ஆக சரிந்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,581 கரோனா படுக்கைகளில் 122 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT