நரேந்திர சிங் தோமா் 
இந்தியா

போலி விதைகள் விற்பனையை மாநிலங்கள் தடுக்க வேண்டும்: மத்திய அமைச்சா் தோமா்

போலி விதைகள் விற்பனையை மாநிலங்கள் கடுமையாகத் தடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

DIN

புது தில்லி: போலி விதைகள் விற்பனையை மாநிலங்கள் கடுமையாகத் தடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தேசிய இணையவழி கருத்தரங்கு ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தியையும், விவசாயிகளின் வருமானத்தையும் தரமான விதைகள் அதிகரிக்கும். விதைகளுக்கான கள்ளச் சந்தை, போலி விதைகள் விற்பனையை மாநில அரசுகள் கடுமையாகத் தடுக்க வேண்டும். சில பயிா்களுக்குத் தரமான விதைகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாட்டை சரிசெய்வதும், சிறந்த திட்டமிடலுக்கு அழுத்தம் அளிப்பதும் அவசியம். விதைகள் விற்பனையில் அரசு மற்றும் தனியாா் விலையில் உள்ள வித்தியாசத்தை குறைக்க வேண்டும் என்றாா்.

மத்திய வேளாண்மைத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்த்லஜே பேசுகையில், ‘‘இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கும் விதைகள் ஆணிவோ் வரையுள்ள விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்’’ என்றாா்.

மத்திய வேளாண்மைத் துறைச் செயலா் மனோஜ் அஹுஜா பேசுகையில், ‘‘விவசாயிகளுக்குத் தரமான விதைகளை வழங்க ஊராட்சி அளவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விதைகளின் தரப் பரிசோதனை குறித்து விவசாயிகளும் அறிந்திருக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT