இந்தியா

சொன்னபடி செய்தார் கபில் சிபல்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினால்கூட பாஜகவில் இணையமாட்டேன் என கபில் சிபல் கடந்தாண்டு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது தற்போது பேசுபொருளாக அமைந்துள்ளது.

DIN


காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினால்கூட பாஜகவில் இணையமாட்டேன் என கபில் சிபல் கடந்தாண்டு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது தற்போது பேசுபொருளாக அமைந்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா கடந்தாண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் தலைவர்கள் பலர் இதைக் கடுமையாக விமர்சித்தனர். அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்த ஜி23 தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர். 

இந்த நிலையில், ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தது பற்றி சிபல் அப்போது கூறியதாவது:

"ஜிதின் பிரசாதா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதற்குக் காரணம் இருக்கலாம். அதை அவர் வெளிப்படுத்தவில்லை, இருந்தாலும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், பாஜகவில் இணைந்ததுதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கட்சித் தாவல் அரசியலில் இருந்து பிரசாத அரசியலுக்கு நகர்வதை இது வெளிப்படுத்துகிறது. அந்தக் கட்சியில் இணைந்தால், பிரசாதம் கிடைக்கும்.  
 
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள். என் வாழ்வில் ஒருபோதும் பாஜகவில் இணைவது பற்றி சிந்திக்கவே மாட்டேன். காங்கிரஸ் தலைமை விலகுமாறு கேட்டுக்கொண்டால் அதன் அடிப்படையில் வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவேன். ஆனால், பாஜகவில் இணையமாட்டேன்.

நான் ஏன் இன்னொரு கட்சியில் இணைய வேண்டும். நாங்கள் எங்களது சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் செய்கிறோம்" என்றார்.

இப்படிப்பேசிய சிபல் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இருந்தபோதிலும், அவர் சொன்னபடி பாஜகவில் இணையவில்லை. உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சிபல், சமாஜவாதி ஆதரவுடன்தான் களமிறங்குகிறார். சமாஜவாதி கட்சியில் இணையவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அவர் எடுக்கவுள்ள முடிவானது காலத்தின் கையில்தான் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT