இந்தியா

காஷ்மீரில் இந்தாண்டு 26 வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

காஷ்மீரில் இந்த ஆண்டு பாதுகாப்புப் படையினருடனான வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில், லஷ்கரைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் உள்பட இதுவரை 26 வெளிநாட்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்அதிகாரி விஜய் குமார் கூறுகையில், 

இன்று காலை பயங்கர ஆயுதங்களுடன் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள் என்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பான எல்இடியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஜுமாகுண்ட் கிராமத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஜுமாகுண்ட் கிராமத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தொடர்பாக குப்வாரா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் அடிப்படையில் ஊடுருவிய பயங்கரவாதிகளை ராணுவம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியதும், அப்பகுதியில்  துப்பாக்கிச்சூடு  நடத்தப்பட்டது. 

இதையடுத்து, எல்இடி பயங்கரவாதிகளுடன் சேர்த்து காஷ்மீரில் இந்தாண்டு இதுவரை 26 வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT