இந்தியா

சர்ச்சை எதிரொலி: தில்லியில் விளையாட்டு அரங்கங்கள் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிப்பு

DIN

தில்லியில் விளையாட்டு அரங்கங்கள் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தில்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியம் வழக்கமாக இரவு 8 -8.30 மணி வரை திறந்திருக்கும் என்று அலையில் சமீபமாக பயிற்சியில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்கள் இரவு 7 மணிக்கே வெளியேற்றப்படுவதாகவும் அதன்பின்னர் இரவு 7 மணிக்குப் பிறகு ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் தனது நாயுடன் நடைப்பயிற்சி செல்வதாகவும் சர்ச்சை எழுந்தது. 

ஐஏஎஸ் அதிகாரி நடைப்பயிற்சி செல்வதற்காகவே விளையாட்டு வீரர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தில்லியில் விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

'விளையாட்டு வீரர்கள் அனைவரும் இரவு 10 மணி வரை பயிற்சி மேற்கொள்ளலாம், அவர்கள் பயிற்சி மேற்கொள்ள எந்தவித அசௌகரியமும் இருக்கக்கூடாது. விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT