நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட 88% மக்கள்: மன்சுக் மாண்டவியா
நாட்டில் 88 சதவீத மக்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொணடிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
புது தில்லி: நாட்டில் 88 சதவீத மக்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொணடிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 193 (1,93,13,41,918) கோடியை எட்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரையில்,
Advertisement
Advertisement
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் 88 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
வாழ்த்துகள் இந்தியா! தடுப்பூசி போட்ட பிறகும், கரோனா நோயை சரியான முறையில் பின்பற்றுங்கள்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
நாடு விரைவில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்ற இலக்கை நோக்கி விரைகிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.