இந்தியா

கேரளத்தில் ஓரிரு நாள்களில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை

DIN

கேரளா: கேரத்தில் ஓரிரு நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்குகிறது. சென்ற ஆண்டு ஜூன் 3-ல் துவங்கியது. இந்தாண்டு ஓரிரு நாள்களுக்கு முன்பே தொடங்குகிறது.

கேரளத்தைத் தொடா்ந்து கடலோர கா்நாடகம், மும்பை, கொங்கண் பிரதேச கடற்கரைப் பகுதிகள், தலைநகா் புது தில்லி, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாகக் தென்மேற்குப் பருவமழை பொழியும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்குப் பருவமழையால் பயனடைகின்றன. இந்தப் பருவமழை குறைந்தால் நாட்டில் விவசாயமும் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருவமழை தொடங்குவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT