இந்தியா

பெண் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ஓய்வூதியத்தை வழங்கியவருக்கு பிரதமர் பாராட்டு

DIN

ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது ஓய்வூதிய சலுகைளை பெண் குழந்தைகளின் கல்விக்காக வழங்கியதை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனதில் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலம் பாராட்டியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தனது 89வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம் பூபல் ரெட்டியை பாராட்டியுள்ளார். ராம் பூபல் ரெட்டி சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் 100 வங்கிக் கணக்குகளை தொடங்கி அதில் பெண் குழந்தைகளின் கல்விக்காக ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது, “ இந்த சமூகத்திற்கு உதவுவது என்பது தன்னலம் என்பதை மறந்து செயல்படுபவர்களின் தாரக மந்திரம் ஆகும். நம் நாட்டில் எண்ணற்ற மக்கள் இந்த தாராக மந்திரத்தை தங்களது வாழ்வின் இலக்காக கொண்டுள்ளனர். ஆந்திரத்தில் மார்கபுரத்தில் உள்ள ஒரு நண்பரின் மூலம் ராம் பூபல் ரெட்டி குறித்து தெரிய வந்தது. அவர் தனது மொத்த ஓய்வூதியத் தொகையினையும் நம் நாட்டின் மகள்களின் கல்விக்காகக் கொடுத்துள்ளார். அவர் சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் 100 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அதில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார்.” என்றார்.

இது போன்று தன்னலமின்றி உதவும் மனப்பான்மை உள்ளவர்களின் செயல்களால் மற்றவர்களும் ஊக்கப்படுத்தப்பட்டு பல்வேறு உதவிகளை செய்ய வழி வகுப்பதாக  பிரதமர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT